• மூஞ்சூர்பட்டு பாவா பயர் ஒர்க்ஸ் மூடல்.
· மூஞ்சூர்பட்டு பாவா பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு. வேலூர் மாவட்டத்தில் LE-1 உரிமம் பெற்று அணைக்கட்டு வட்டம் , அப்புகல் ரோட்டில் இயங்கி வந்த எலைட் ஸ்ரீ சப்தகிரி பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் 21.10.2026 அன்று வெடிவிபத்து ஏற்பட்டது. மேற்படி வெடிவிபத்து காரணமாக தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்து ஆணையிடப்பட்டது. மேலும் , வேலூர் மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் 9 பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேலூர் உதவி இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் , உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் , தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 9 பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்தது. இக்குழுவின் கூட்டம் 23.10.2026 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ...