Posts

• ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள்.

·         சமூக நல   துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE)   என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணிபுரிந்திட பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் . தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் (24X7) பணிபுரிந்திட பாதுகாவலர் (Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. பாதுகாவலர் (தொகுப்பூதியம்-Rs. 12,000/-) காலிபணியிடத்திற்கான கல்வி தகுதி 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி. மற்றும் பல்நோக்கு உதவியாளர் (தொகுப்பூதியம்-Rs. 10,000/-) காலி பணியிடத்திற்கான கல்வி தகுதி - 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி / தோல்வி, நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராகவும், மையத்தினை தூ...

• வேலூர் இணையவழி விளையாட்டு தீய விளைவு முகாம்

Image
·         வேலூர் மாவட்டத்தில் இணையவழி விளையாட்டு க்கு அடிமை யாவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது.                 வேலூர் மாவட்டத்தில் இணையவழி விளையாட்டு க்கு அடிமை யாவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது                 தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து, மாணவர்களிடையே "இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்தினால் ஏற்படும் தீய விளைவுகள்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. மாணவர்கள் மற்றும் பிற தரப்பினரிடையே இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற வல்லுநர்கள், இணையவழி விளையாட்டு அடிமை...

• வேலூர்12-வது தேசிய கைத்தறி தினவிழா.

Image
·         வேலூர் 12-வது தேசிய கைத்தறி தினவிழா - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்து 15 பயனாளிகளுக்கு ரூ.4.72 இலட்சம் மதிப்பில்   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                         1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை போற்றும் வகையிலும் கைத்தறி நெசவாளர்களின் பங்கினை கௌரவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் பெருமையை போற்றும் விதமாக தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது தேசிய கைத்தறி தினம் தமிழ்நாட்டில் 07.08.2015 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.                  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅல...

• குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பணிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Image
 ·         குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்  ஆய்வு.                  வேலூர் மாவட்ட ம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், குடியாத்தம் ஒன்றியம், மோர்தானா அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோர்தானா அணையிலிருந்து 4.20 கி.மீ நீளத்தில் 110.58 ஏக்கர் நேரடி பாசனமும், 5 கிராமங்களும் வலதுபுற பிரதான கால்வாயின் 43.50 கி.மீ நிளத்தில் 12 ஏரிகளும் 25 கிராமங்களும் 3937.63 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இடதுபுற பிரதான கால்வாய் 32.25 கி.மீ நீளத்தில் 7 ஏரிகளும், 19 கிராமங்களும் 4227.023 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மொத்தம் 8367 ஏக்கர் நிலங்கள் பாசனம் பயன்பெறும் வகையில் மோர்தானா அணையின் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது ...

• காட்பாடி தெற்கு தி.மு.க கலைஞர் நினைவு நாள்.

Image
·          காட்பாடி தெற்கு தி . மு . க சார்பில் கலைஞர் நினைவு நாள். ·          கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை       வேலூர் மாவட்டம், காட்பாடியில் , காட்பாடி தெற்கு பகுதி தி . மு . க சார்பில் முன்னாள் தி . மு . க . தலைவரும் , முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது .              அதனை முன்னிட்டு காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு தெற்கு பகுதி செயலாளரும் , வேலூர் மாநகராட்சி துணைமேயருமான எம் . சுனில்குமார் தலைமை தாங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினார் . காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா , காட்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .     நிகழ்ச்சியில் துரைசிங்காரம் , மாவட்ட பொருளாளர் நரசிம்மன...

• குடும்ப அட்டையில் E-KYC கைவிரல் ரேகை பதிவு செய்தல் சிறப்பு முகாம்.

·         குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் E-KYC   கைவிரல் ரேகை பதிவு செய்தல் சிறப்பு முகாம் வருகிற 08 .08.2026 மற்றும்   09 .08.2026 அனைத்து நியாய விலை கடைகளிலும் நடைபெறுகிறது – மாவட்ட   ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்                 வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் அனைத்து நியாய விலை கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைவிரல் ரேக...

• வேலூர் விமான நிலையத்தை திறக்க விஐடி வேந்தர் கோரிக்கை.

Image
 ·          வேலூர் விமான ‌ நிலையத்தை விரைவில் திறக்க கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு விஐடி வேந்தர் கோரிக்கை.       வேலூர் விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் புதுதில்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை , விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் அண்மையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார் .       இச்சந்திப்பின் ‌ போது , வேலூர் விமான நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் .       அப்போது , வேலூர் விமான நிலையத்தை விரைவில் திறந்து விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதி அளித்தார் .