Posts

• ஆடி அமாவாசை முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்பணம்.

Image
 ·          ஆடி அமாவாசை முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்ப ண ம்.                வேலூர் மாவட்டம் , வேலூர், முத்துமண்டபம் பகுதியில் உள்ள பாலாற்றின் கரையோரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு உயிர் நீத்த தங்களின் முன்னோர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் வந்து வேதவிற்பன்னர்களை கொண்டு வேதமந்திரங்கள் முழங்க   தர்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.  

• பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் பெங்களூர் அனுப்பும் பணி.

Image
  ·          வேலூரில் இருந்து பழுதடைந்த 365 வாக்கு பதிவு இயந்திரங்கள் பெங்களூர் அனுப்பும்   பணி   ·          அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.           வேலூர் மாவட்டம் , வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணைய கிடங்கில் வாக்குசாவடி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ், சீலை திறந்து மாவட்டத்தில் பழுதடைந்துள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் பைலட் யூனிட் போன்ற 365 வாக்கு பதிவு இயந்திரங்களை இங்கிருந்து பெங்களூர் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணியினை ஆட்சியர் துவங்கினார்.          இதில் காங்கிரஸ் , திமுக , அதிமுக , தேமுதிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.  

• வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சேவைகள்.

·         வேலூர் மாவட்டத் தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி    பொதுமக்கள் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சி தலைவர் .   வேலைவாய்ப்புப் பதிவு , பதிவு புதுப்பித்தல் , வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை , கூடுதல் பதிவு , முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது . மேலும் , மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது . இந்நேர்வில் , புலனசெய்தி ( Whatsapp) மற்றும் Facebook, Youtube, Instagram- களில் காணொளிகள் வாயிலாக மேற்படி சேவைகளை கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக தெரிவித்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது...

• மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

·             மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 202 6 -202 7 வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள்   இணையதளத்தில் பதிவு செய்ய, வேலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு                 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை   ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும்.   இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி. அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளின் முக்கிய நோக்கமாகும். வேலூர் மாவட்டம் சார்பாக 202 6 -202 7 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடுமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட...

• குடியாத்தம், அணைக்கட்டு வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு.

Image
·         குடியாத்தம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.                 வேலூர் மாவட்ட ம், குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு   ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் அரசு தோட்டக்கலை   பண்ணை,   மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள், அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நாற்றங்கால்   பண்ணை   ஆகிய   வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் , அகர ம் சேரி அரசு தோட்டக்கலைப் பண்ணை யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த தோட்டக்கலை பண்ணை உள்ளூர் விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் தரமான நடவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய நோக்கில் 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 34.53 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இ...

• வேலூரில் போதையில்லா தமிழ்நாடு உறுதி மொழி ஏற்பு.

Image
·          வேலூரில் ஊரீசு கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழி ஏற்பு .   ·          தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.            வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரியில் தமிழக முதல்வர் சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறையின் சார்பில் போதையில்லா தமிழ்நாடு மாநில அளவில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு போதை பொருட்களை ஒழிக்க சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கும் விழா நடைபெற்றது.       இதில் வேலூரில் ஊரீசு கல்லூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் , மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ , மாண...

• TAMCO கடன் மேளா முகாம்கள்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ( TAMCO ) மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு வழங்கப்படும் கடன்   திட்டங்கள் - 2026-2027, வங்கி கிளை வாரியாக   கடன் மேளா முகாம்கள் நடைபெறவுள்ளது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் . சிறுபான்மையின மக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.   இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் தனிநபர் கடன், குழுக் கடன், விராசத்கடன் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது, அதன் விவரம் பின்வருமாறு:   வ. எண் திட்டம் தகுதி தேவைப்படும் சான்றுகள் 1 தனி நபர் கடன் 1.                                        ...