• மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் நவராத்திரி.
· மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா. · தொழிலதிபர் செல்வம் யாதவ் பங்கேற்பு வேலூரில் ஸ்ரீ மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் , ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன் , ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச பெருமாள் கோவிலில் 37- ம் ஆண்டு நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது . கடந்த 11- ம் தேதி ஸ்ரீ மஹா துர்க்கை அம்மன் அலங்காரத்துடன் நவராத்திரி திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து கஜலட்சுமி அலங்காரம் , சிவலிங்க பூஜை அலங்காரம் , அன்னபூரணி அலங்காரம் , வாராகி அலங்காரம் , திருவேற்காடு கருமாரியம்மன் அலங்காரம் ஆகியவை நடந்தது . மாலை தொழிலதிபர் கே . செல்வம் யாதவ் ஏற்பாட்டில் அவருடைய தலைமையில் ஸ்ரீ லட்சுமி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது . இதில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் முனைவர் கவிஞர் ச . லக்குமிபதி கலந்து கொண்டு ' நலம் தரும் நவராத்திரி ' என்ற ...